search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனல்மின் நிலையம்"

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முதல் நிலை மூன்றாம் அலகில் 210 மெகாவாட் இரண்டாவது நிலை முதல் அலகில் 600 மெகாவாட் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளன.

    முதல்நிலை முதல் மற்றும் இரண்டு அலகில் 420 மெகாவாட் இரண்டாம் நிலை இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மொத்தம் 1020 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.

    பழுதினை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒரு டன் இரும்பு கம்பி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வாயலுர் பகுதியில் வட சென்னை அனல்மின் நிலையத்தின் நான்காவது நிலை விரிவாக்க பனி நடைபெற்று வருகிறது.

    கடந்த 19-ந் தேதி இங்கிருந்த பழைய இரும்பு கம்பி திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மானேஜர் பவிதரன் காட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருவெள்ளவாயலில் பழைய இரும்பு கடையில், இரும்பு கம்பியை மினிலாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.

    போலீசார் விசாரணை செய்தபோது அவை வட சென்னை அனல் மின் நிலையத்தில் திருடப்பட்டவை என்பது தெரிந்தது.

    இதையடுத்து பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த கரிமுல்லா, நந்தியம் பாக்கத்தை சேர்ந்த திலிப்பன்டித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 1 டன் கம்பி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யபட்டு வந்த 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது. #ThermalPowerStation

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முதல் நிலையில் மூன்று அலகுகளில் தலா 630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதே போல இரண்டாம் நிலை இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் நிலை மூன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது.

    இதையடுத்து அதில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு நிலைகளில் மொத்தம் 1620 மெகா வாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.

    கொதிகலன் குழாயை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். #ThermalPowerStation

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யபட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 630 மெகாவாட்டும் இரண்டாம் நிலையில் இரண்டு நிலைகளில் தலா 600 மெகாவாட் வீதம் மொத்தம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது இரண்டு நிலைகளில் மொத்தம் 1230 மெகாவாட் மட்டும் உற்பத்தி நடைபெறுகிறது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட அலகில் கொதிகலன் குழாயை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ×